நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்தார். இது தொடர்பான செய்திகளை அடிப்படையாக கொண்டு ஹெச்.ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுடன் அக்டோபர் 22-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஹெச்.ராஜாவுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன், ஹெச்.ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஹெச்.ராஜாவை தண்டிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Classic Right sidebar ஹெச் ராஜா, நீதிமன்ற அபமதிப்பு, H Raja, Court Contempt Case அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OSH0BP
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment