அமெரிக்காவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுசபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற சந்திப்புகளில் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் நியூயார்க் நகரில் சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுஷ்மா சுவராஜ்,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு,சார்க் நாடுகளின் நல்லுறவு குறித்து விவாதித்தனர்.
Classic Right sidebar சுஷ்மா சுவராஜ், சார்க், SushmaSwaraj இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xWwzWI
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment