திருமணத்தை மீறிய தவறான உறவில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படுவதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
திருமணம் ஆன பெண்ணுடன் அவரது கணவரின் சம்மதம் இன்றி வேறு ஒரு திருமணமான ஆண் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் விபசார சட்டத்தில் ஆண் மட்டுமே கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
தொடர்புடைய அந்த பெண்ணுக்கு தண்டனை கிடையாது என்று இந்திய தண்டனை சட்டம் 497 மற்றும் தொடர்புடைய குற்ற சட்டப்பிரிவு 198 ஆகியவை இதனை வலியுறுத்துகிறது.
இதுபோன்ற வழக்குகளில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
Classic Right sidebar விபசார சட்டம், உச்சநீதிமன்றம், Supreme Court, பாலியல் ரீதியான தொடர்பு, Sexual Relationship, Illegal Affair, Dipak Misra இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DA2EJN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment