கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹாராவிடம் இந்தியாவின் சாய்னா நேவால் போராடித் தோல்வி அடைந்தார்.
தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப்போட்டியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நேவால், 3-வது இடத்தில் உள்ள நஸோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா கைப்பற்ற, 2-வது செட்டை ஒகுஹாரா கைப்பற்றி பதிலடி கொடுத்தார். பின்னர் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் தொடக்கத்தில் சாய்னா முன்னிலையில் இருந்தார்.
ஆனால், அவர் சில தவறான ஷாட்கள் அடித்ததால், 20க்கு 22 என வெற்றியை கோட்டைவிட்டார். இறுதியில், 2க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒகுஹாரா அரையிறுதிக்கு முன்னேறினார்.
Classic Right sidebar சாய்னா நேவால், பேட்மிண்டன், கொரிய ஓபன், saina nehwal, Badminton, Korea Open விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R7xtbJ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment