திரிபுரா மாநிலத்தில் திருமணமான வேறொரு ஆணுடன் தகாத உறவுவைத்துக் கொண்டதாகக் கூறி பெண் ஒருவரை கிராம மக்கள் கட்டிவைத்து செருப்பு மாலை அணிந்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திரிபுராவின் அகர்தலா நகரில் பர்பா ரங்கமதி கிராமத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவரை அந்த கிராம மக்கள் இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அந்த பெண்ணின் முகத்தில் மையை பூசியதுடன், செருப்புகளால் ஆன மாலையை அணிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அந்த பெண் திருமணமான ஆண் ஒருவருடன் தகாத உறவில் இருந்தார் என்றும் அதற்கு தண்டணை வழங்கவே மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.
வேறொருவர் மனைவியுடன் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ள நிலையில் திரிபுராவில் நடந்த சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Classic Right sidebar திரிபுரா, Tripura இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OpbPkN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment