தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என்றும், இந்த உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தகாத உறவு விவகாரத்தில் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497-ல் மாற்றம் கொண்டு வரக் கோரி தாக்கல் செய்த மனுவை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல என்றும், பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்,
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார். மேலும், தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என்றும், மேற்கு ஐரோப்பா, சீனாவில் இந்த உறவு குற்றமாக பார்க்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
மேலும் இந்த உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்வதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளித்தார்.
Classic Right sidebar India, Dipak Misra, Section 497, Adultery Law, தகாத உறவு, சட்டப்பிரிவு 497, தீபக் மிஸ்ரா இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N5nnVe
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment