நடிகர்கள் அரசியல் வருவதற்கு தமிழக அரசியல் களம் புதிதல்ல. சொல்லப்போனால் தமிழக அரசியலுக்கு திரைத்துறை தான் 3 முதல்வர்களை தந்திருக்கிறது. இப்போது கூட நடிகர் கமல்,ரஜினி, விஷால் என்று அடுத்தடுத்து நடிகர்கள் தங்கள் அரசியல் பிரவேசங்களில் பிசியாக இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் அவ்வப்போது தன்னுடைய படங்களில் அரசியல் டச் கொடுப்பது நடிகர் விஜயின் வழக்கம். தலைவா படத்தில் Its Time to Lead என்ற வார்த்தைகளை பயன்படுத்தியவர் கத்தி திரைப்படத்தில் கம்யூனிச கொள்கைளை பேசி விவசாயிகள் பிரச்சனைகள், பொருளாதாரம்,ஜிஎஸ்டி என அரசியல் வசனங்களை கையில் எடுத்தார்.
மேலும் பிஹைன்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்-க்கு Samrat of South Indian Box Office என்ற விருது வழங்கப்பட்ட போது அவர் பேசிய வார்த்தைகள் விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரோ என்ற எண்ணத்தை மீண்டும் அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் பேசிய விஜய் " எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி.இப்போது கூட நான் முழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த சந்ததிக்கு அதுகூடக் கிடைக்காது. ஒரு ஜவுளிக்கடை முதலாளி இன்னொரு ஜவுளிக்கடைக்குச் சென்று துணி எடுக்க முடிகிறது, ஒரு நகைக்கடை முதலாளி இன்னொரு நகைக்கடைக்கு சென்று நகை வாங்க முடிகிறது. ஆனால், ஒரு விவசாயி மட்டும் தான் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறான்.
ஏனென்றால் இலவச அரசிக்காக. வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள்." என்று பேசினார்.
அடுத்து மெர்சல் திரைப்படத்தில் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே,வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே என்ற பாடல் வரிகள் மூலம் நம் நாட்டை தமிழன் ஆண்டால் அனைத்து சந்தோஷங்கள் கிடைக்கும் என்ற வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது சர்கார் படத்தின் சிம்டாங்காரண் என்ற பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிம்டாங்காரண் என்றால் கவர்ந்து இழுப்பவன், வசீகரமானவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று விஜய் ரசிகர்கள் ஒரு டிக்ஷ்னரியை உருவாக்கி கொண்டிருக்க கண் இமைக்காமல் யார் ஒருவரை பார்க்க முடிகிறதோ அவர்தான் "சிம்டாங்காரன்" என பாடலாசிரியர் விவேக் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த பாடல் வரிகளில் ஏய்ய் நிக்கலு பிக்கலுமா ,ஓ…. தொட்டனா தூக்கலுமா,மக்கரு குக்கருமா,போய் தரைல உக்கருமா என்ற வரிகள் இருக்கிறது. இப்போதைக்கு குக்கர் சின்னம் இருக்கும் தமிழக கட்சி அமமுக தான். அதிமுகவிற்கும், அமமுகவிற்கும் பல்வேறு பிரச்சனைகள் இருக்க அவர்களை ஓரமாக போக சொல்கிறாரோ என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் , பிஸ்துபிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து என்ற வரிகள் இருக்கிறது. ஆக அனைவரையும் அரள வைக்கும் திட்டமும் நடிகர் விஜயிடம் இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
"நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல அல்லா ஜோரும் பேட்டைல சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு " நாம் இப்போது வென்றிருக்கும் கோட்டையிலும் அதற்கு காரணமான பேட்டையிலும் அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் சேட்டையில் என் சொல்கிறார். அரசியலுக்கு வர இருப்பதை இந்த வரிகள் மூலம் அடிக்கோடிட்டு காட்டியிருப்பதாகவும் நடிகர் விஜயின் ரசிகர்கள் கருதுகின்றனர்.
பல்வேறு திரைப்படங்களில் அரசியலை தொட்டு சென்ற நடிகர் விஜய் சர்க்கார் திரைப்படத்தின் மூலம் நேரடியாக அரசியல் குறித்து அதிகம் பேசியிருப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Classic Right sidebar சினிமா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IsflW8
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment