தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அம்ருதா என்ற பெண்ணின் கண்முன்னே, கணவர் பிரனப் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த ஆணவக் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து அடுத்த சில தினங்களில் ஐதரபாத்தில் நடுரோட்டில் தம்பதி வெட்டப்பட்டனர்.
வேறு சமூகத்தை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த தந்தை இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மீண்டும் ஒரு பதற வைக்கும் கொலை அரங்கேறியுள்ளது.
ஐதராபாத் அருகே அட்டபூரில் பிரபல ரவுடி ரமேஷ் என்பவரை, ஒருவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் காவலர்கள் கண்முன்னே நடந்த கொடூர கொலை சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Classic Right sidebar தெலங்கானா, telangana, சாதி மறுப்பு திருமணம், Inter Caste Marriage, Brutal Murder இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Q97kaV
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment