Wednesday, September 26, 2018

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வெளியேற்றி இறுதி போட்டிக்குள் நுழைந்தது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

லிட்டன் தாஸ் (liton das), சவ்ம்யா சர்க்கார் (Soumya Sarkar) ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இறுதியில், வங்கதேசம் அணி  48 புள்ளி 5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. வங்கதேசம் அணியின் பந்து வீச்சில் அனல் பறந்ததால் பாகிஸ்தான் அணியினரின் விக்கெட்டுகள்  விழுந்தன. இதனால் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று, ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தானை வெளியேறியது.  இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் அணி நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

Classic Right sidebar ஆசிய கோப்பை, Asian Cup, Pakistan, bangladesh, UAE, பாகிஸ்தான், வங்காளதேசம் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R1svgv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment