Thursday, September 27, 2018

ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் விலகல்

காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் விளையாடாதது உறுதியாகியுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விளையாடாதது உறுதியாகியுள்ளது.

இடது கை விரலில் உள்ள காயத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் ஷாகிப் விளையாடவில்லை. இந்நிலையில், காயத்திற்கு 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படுவதால், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் ஷாகிப் விளையாடமாட்டார் என வங்கதேச கிரிக்கெட் சங்க தலைவர் அக்ரம் கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Classic Right sidebar ஆசியக்கோப்பை, ஷாகிப் அல் ஹசன், கிரிக்கெட், Asia Cup, Shaib Al Hasan, Cricket விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Od2r3z
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment