ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி 2 ஸ்டம்பிங் அவுட் செய்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்று 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியின்போது, வங்கதேச வீரர்களான லிட்டோன் தாஸ் மற்றும் கேப்டன் மோர்டஸா ஆகிய இருவரையும் அசுர வேகத்தில் விக்கெட் கீப்பர் தோனி, ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார்.
இதன்மூலம், 800 ஸ்டம்பிங் செய்த தோனி, ஆசிய அளவில் அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை தோனி பிடித்துள்ளார்.
998 ஸ்டம்பிங்கள் செய்த தென்னாஃப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.
Classic Right sidebar ஆசியக்கோப்பை, Asia Cup, India, bangladesh, ms dhoni, Stumpings, இந்திய அணி, வங்கதேச அணி, ஸ்டம்பிங் விளையாட்டு 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DGA7ST
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment