சென்னை போரூரில் கால் டாக்சி ஓட்டுனர் கடத்தப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், தாம்பரத்தில் உள்ள கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வேலையில் இருந்த நின்ற விக்னேஷ், போரூரில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தியுள்ளது. இது குறித்து அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தாம்பரம் அருகே காரை மடக்கி பிடித்து விக்னேஷை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தன்னுடன் பணிபுரிந்த கவுதம் என்பவரின் தங்கைக்கு விக்னேஷ் செல்போனிலும், முகநூலிலும் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பியதால் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது
Classic Right sidebar கால் டாக்ஸி ஓட்டுநர், கடத்தல், போரூர், Cal Taxi Driver, Kidnap, Porur தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zAyodJ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment