Wednesday, September 26, 2018

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகளில் நடவடிக்கை!

அவதூறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 23-ம் தேதி அவரை கைது செய்தனர்.  

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar அவதூறு வழக்கு, கருணாஸ், mla Karunas, Egmore Court, எழும்பூர் நீதிமன்றம், Chennai, ADMK தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DwNFQL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment