Friday, September 28, 2018

''சோலோ நாயாகியாக பல கோடி வசூல் சாதனை செய்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா நடிப்பில் இம்மாதம் 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான படம் ‘யு டர்ன்’. சிவகார்திகேயனின் சீமராஜா படத்துடன் வெளியான இந்த படம் இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'யு டர்ன்' படம் இதுவரை 23 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சமந்தாவுடன் நடிகர் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட மொழியில் இதே தலைப்பில் வெளியான படத்தில் விக்ரம் வேதா நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்திருந்தார்.

இது மக்களிடையே அமோக வரவேற்பை பெறவே இதனை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கினார் இயக்குநர் பவன்குமார். ஷ்ரத்தாவின் கதாப்பாத்திரத்தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இதை தமிழிலும் வெளியிடும் முடிவு படக்குழுவுக்கு வந்தது.

அனிரூத் இசையமைத்திருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கோடிக்கணக்கில் வசூலும் குவியத்தொடங்கியது. சமந்தா சோலோ நாயகியாக நடித்த முதல் படம் இது. இருப்பினும் 23 கோடி வசூல் செய்து படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு சமந்தா தனது ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar சமந்தா, சினிமா, யு டர்ன், samantha, Cinema, U Turn சினிமா சமந்தா, சினிமா, யு டர்ன், Samantha, Cinema, U Turn 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y5rXOb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment