திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவே அவர் அனுமதிக்கப்பட்டார். மு.க. ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வலது கால் தொடையில் இருந்த நீர்க்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மு.க. ஸ்டாலின் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ தெரிவித்துள்ளது.
Classic Right sidebar சென்னை, அப்பல்லோ மருத்துவமனை, Chennai, Apollo Hospitals, சிறுநீரக தொற்று நோய், MK Stalin, மு.க.ஸ்டாலின் தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N4tFVl
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment