அரபிக்கடல் பகுதியில் இருந்து தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்; அதேப்போல், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது; அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்
கடந்த 24மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல் நிலக்கோட்டையில் தலா 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கரூர் பஞ்சப்பட்டியில் 10 செ.மீ, காரைக்காலில் 8 செ.மீட்டரும், ஈரோடு பெருந்துறை, நீலகிரி குன்னூர் உள்ளிட்ட இடங்களீல் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், மதுரை, கோவை, தஞ்சை, நாகை உள்ளிட்ட இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Classic Right sidebar Tamilnadu weather, Tamilnadu, Chennai Meteorological Centre, Chennai, Weather Alert தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OVCMJM
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment