Thursday, September 27, 2018

நடிகர் அஜித்தின் 'தக்‌ஷா குழு' டிரோன் ஒலிம்பிக்கில் 2-வது இடம் பிடித்து அசத்தல் !

நடிகர் அஜித் ஆலோசகராக பணிபுரிந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான டிரோன் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 

கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார். அவரது மேற்பார்வையில் விமானம் இயக்கும் நுட்பங்களை பயின்ற தக்‌ஷா மாணவ அணியினர், 6 மணிநேரம் 7 நிமிடம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர். இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இந்நிலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆளில்லா சிறிய ரக விமானங்களை வடிவமைப்பதற்கான டிரோன் ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது இதில் அஜித்தின் தக்‌ஷா குழு இரண்டாவது இடத்தை சொந்தமாக்கியுள்ளது.
 

Classic Right sidebar நடிகர் அஜித், தக்‌ஷா குழு, ஆஸ்திரேலியா, தக்‌ஷா சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Dz433e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment