கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கொரியாவில் சர்வதேச பேட்மிண்டன் தொடரானது வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மகளிர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், உள்ளூர் வீராங்கனை கிம் ஹியோ மின் (KIM Hyo Min) உடன் விளையாடினார். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடி புள்ளிகளை எடுத்த சாய்னா 21-12, 21-11 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QYpTjt
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment