பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது மதவெறி தலைக்கேறிய மூடர்களே என்று அறிக்கை வெளியிட்டுள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஹெச். ராஜா விதைத்த விஷ விதையின் நச்சு பரவிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கூடாது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சுயமரியாதை என்ற சமூக நீதியை வலியுறுத்துவதே திராவிட இயக்கம்.
சாதி - மத ஒடுக்குமுறை, ஆண் -பெண் பாலின பேதம் ஆகியவற்றை திராவிட இயக்கம் ஏற்பதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பெண்ணுரிமை, பெண் விடுதலை சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை பெண்களுக்கு வழங்கிய இயக்கம் தி.மு.க. என்று கூறியுள்ளார்.
எனவே, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அளித்த முற்போக்கான தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெரியார் விதைத்த விதை, பேரறிஞர் அண்ணா வளர்த்த நாற்று, தலைவர் கலைஞர் காலமெல்லாம் பாதுகாத்து வளர்த்த மரம் - அதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூக நீதியாக விழுது பரப்பி, ஒடுக்கப்படுகின்ற அனைவருக்கும் நிழல் கொடுப்பதாக பெருமிதம் தெரிவித்துளளார்.
அவரவர் நம்பிக்கை மற்றும் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போராடுவதே திராவிட இயக்கத்தின் நூறாண்டு கால வரலாறு என்று கூறியுள்ள ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாடுபடுவதாக கூறியுள்ளார்.
மதவெறியைத் தூண்டி, கலவர நெருப்பைப் பற்ற வைத்து, அமைதியைக் குலைத்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என நினைக்கின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் புதிய வகை ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன என்றும், அனைத்து தமிழர்களாலும் மதம் - சாதி கடந்து போற்றப்படும் தலைவரான தந்தை பெரியாரின் சிலைகளைக் குறி வைத்துத் தாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
மதவெறித்தனம் தலைக்கேறிய மூடர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்வதாக அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
Classic Right sidebar
ஸ்டாலின்,
பெரியார்,
பெரியார் சிலை,
Periyar Statue,
Periyar,
Stalin அரசியல் 
100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OZxn4q
via
Rinitha Tamil Breaking News