Monday, March 30, 2020

காவல்துறை நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:கோவிட் 19 தொற்றை தடுக்க 144 தடை உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. அரசு அத்தியாவசிய பொருட்களை விற்கவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறவில்லை,மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 17 ஆயிரத்து 118 வழக்குகள் பதியபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வீடியோ அழைப்பு மூலம் மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு காவல்துறையினரின் நடவடிக்கையால் தனி மனிதனின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post காவல்துறை நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3dF72p0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment