Wednesday, April 10, 2019

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது.

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அந்த மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது . இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2D11h4j
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment