Monday, April 15, 2019

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் ,சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Iy7wQv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment