Sunday, March 24, 2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு

மாநகராட்சி துணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஆக்கிரமிப்பு அகற்றும் சம்பவம் சம்பந்தமாக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் திரு.வி.க. நகரைச் சார்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் தாக்கல் செய்த மனுவில், “பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ரெட் ஏரி வரை செல்கின்றது. இச்சாலையில் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. இச்சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே 70 அடியாக விரிவாக்கம் செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. எனினும் அச்சாலை விரிவாக்கம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருப்பதாக கடுமையாக உள்ளதாக மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பேப்பர் மில்ஸ் சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்ததாக இருக்கிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சென்னை மாநகராட்சியின் 6-ஆவது மண்டல துணை ஆணையர் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

English News: Contempt of Court against Chennai Municipality Assistant Commissioner

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாநகராட்சி துணை ஆணையர் ஆஜராக உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2JCQ1Rr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment