Tuesday, March 26, 2019

அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொது நல மனு தாக்கல் செய்தார் .மனுவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகள் அரசியல் கட்சியினர் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டு சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான விதிகளை அமல்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் , மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகளை அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்காக தோண்டுவதை கட்டுப்படுத்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கொடிக்கம்பங்கள் நடுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் – ஒழுங்கு பாதிக்க படுவதாக குறிப்பிட்டுள்ளார்.பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க 2016-ம் ஆண்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கம்பங்களை அகற்ற ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மீதம் உள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவுவிட்டார்கள்.

The post அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HHoUmt
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment