Wednesday, February 27, 2019

சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்

சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்

சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோர்கள் மீது அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிஅரசர்கள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள், விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்படுவது இன்னும் தொடர்கிறது. இவ்விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு இன்னும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இவ்விவகாரத்தில் அரசு கடினமான நிலையில்தான் தான் பாடம் கற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது என கருத்து தெரிவித்தார்கள். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அனுமதி பெறாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி காஞ்சிபுரம் கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் ஆகியோர்கள் மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்ட்டார்கள்.

Illegal Banner issue: Madras high court has directed the Kancheepuram Municipality Commissioner, the Kancheepuram District Superintendent of Police, and the Kancheepuram district Collector to personally remain present before the High court on March 13 

The High Court bench gave contempt petition Direction against the applications filed by social activist Traffic Ramaswamy.

The post சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GM4doM
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment