Tuesday, January 8, 2019

கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா்.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது . விரைவில் இந்த புதிய மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2C9Lkr9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment