Friday, January 18, 2019

கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்


கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையிலிருந்து வந்த சயானை போலீஸார் கைது செய்தனர். சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கொடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக தெரிவித்ததை அடுத்து சயான் மற்றும் மனோஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2T2tzBj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment