Wednesday, August 14, 2019

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம்

டெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் , கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.தடைகளையும், கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும்,இல்லையென்றால் உச்சநீதிமன்றம் தலையிடும் நிலைமை ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

The post காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசுக்கு இரண்டு வாரம் கெடு – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2KJQiiO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment