மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர், முன்பு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் அவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண் பத்திரிகையாளர்கள் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர். மத்திய இணையமைச்சர் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இதேபோல், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ராவும் பதில் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சரும், பிரதமரும் பேச வேண்டும் என்ற கேட்டுக்கொண்டுள்ள மணிஷ் திவாரி, இருவரும் மௌனமாக இருப்பது சரியல்ல’’ என்று விமர்சித்துள்ளார்.
100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CyMwXF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment