Wednesday, October 10, 2018

எகிரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 61 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

தற்போது தொடர்ந்து உச்சத்தில் உள்ள,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று  ஒரு லிட்டர் பெட்ரோல், 11 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 61 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 29 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Classic Right sidebar பெட்ரோல், டீசல் விலை, Petrol Diesel Price, Fuel Price Surge, Chennai, சென்னை, தமிழகம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yr7tPU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment