டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வெறும் 10 பந்துகளில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மலேசிய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.
கோலாலம்பூரில் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில், மலேசியா - மியான்மர் இடையிலான ஆட்டம் ஒன்றில், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் 10.1ஓவர்களாக குறைப்பட்டது.
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மியான்மர் அணி 10.1ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதுதான் டி20 உலகக்கோப்பை போட்டியில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த ரன்னாகும்.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக மலேசிய பந்துவீச்சாளர் பவன்தீப் சிங் 4ஓவர்கள் வீசி ஒருரன் மட்டும் கொடுத்து 5விக்கெட்டுக்களை சாய்த்தார். இதன் பின் களமிறங்கிய மலேசிய அணி 10பந்துகளில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Classic Right sidebar மியான்மர், மலேசியா, கிரிக்கெட், டி20, Myanmar, Malaysia, Cricket, T20 விளையாட்டு
100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2REFXqT
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment