சென்னை சைதாப்பேட்டையில் நெஞ்சு எரிச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர், சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது . ஊசி போட்ட சில நிமிடங்களில் சுய நினைவை இழந்த இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தததை அடுத்து, சிகிச்சை அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்
நெல்லையை சேர்ந்த சேர்மராஜா என்ற 28 வயது இளைஞர், சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சேர்மராஜவுக்கு இன்று காலை நெஞ்சு எரிச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரது நண்பர்கள் அவரை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த சையது உஸ்மான் என்ற மருத்துவர், pan40 என்ற மருந்தை வாங்கி வர சொல்லி ஊசி போட்டு உள்ளார்.
சிறிது நேரத்தில் சேர்மராஜாவுக்கு fix வந்து, அடுத்து இரண்டு நிமிடத்தில் அவர் சுய நினைவை இழந்தார். இதனால், பயந்து போன உறவினர்களும், நண்பர்களும், உடனே வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், செல்லும் போது வழியிலேயே சேர்மராஜா உயிரிழந்தார். இதனையடுத்து சேர்மராஜாவின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி இராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் போலி மருத்துவரா ? அல்லது வேரெதும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Classic Right sidebar
சென்னை,
Chennai,
Saidapet,
சைதாப்பேட்டை,
Suspicious Death,
Private Hospital தமிழகம் 
100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A5Qepr
via
Rinitha Tamil Breaking News