Friday, October 19, 2018

500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்

கர்னூல்:அக்டோபர் 19, 2018

ராஜ்குமார்(33) என்பவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் .அவர் வழுக்கை ஆனால் விக் வைத்து பேஸ்புக்கில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்தார் .தன்னை இளமையாக கட்டிக்கொண்டார் . அவர் பெண்களை கவரும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக்கில் போடுவது வழக்கம் .ஒவ்வொரு பெண்ணாக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.பணக்கார வீட்டு பெண்களிலிருந்து உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை விட்டுவைக்கவில்லை. ஒரு துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை.அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுப்பது வழக்கம் . பிறகு அவர்களிடம் இருந்து பணம் அல்லது நகை வாங்க முயற்சிசெய்வார் , கிடைக்கவில்லை என்றால் அவர்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பி விடுவாராம்.

ராஜ்குமார் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் பணத்தை தர முடியவில்லை ,அதனால் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில் அனுப்பி வைரலாக்கி விட்டார் ராஜ்குமார். இதை பற்றி பெண்ணின் அப்பாவுக்கு தெரிந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் .இதனால் 2016-ம் ஆண்டில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.வெளியே வந்த ராஜ்குமார் மறுபடியும் அதே போல் ஏமாற்ற நினைத்தார் ஆனால் காவல்துறை அவரை விடவில்லை . மறுபடியும் சிறையில் உள்ளார் .

The post 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2EyLQUd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment