Monday, September 16, 2019

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம்

டெல்லி: அனுராதா பாசின் மற்றும் காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய்,போப்டே மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவில் காஷ்மீரில் தகவல் தொடர்பு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயல்படாததால் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தை அணுகமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் தகவல் தொடர்பு மூடப்பட்டுள்ளது.செய்தித்தாள்களை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை, இப்பகுதியில் இருந்து பல செய்தித்தாள்கள் வெளியிடப்படுகின்றன என்று அரசு முதன்மை ஆதரவுரைஞர் தெரிவித்தார்.மனுதாரர் தானாக முன் வந்து முடியதாக தெரிவித்தார். இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை ஏன் மனுதாரர் அணுக முடியவில்லை – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LYe6jx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment