Monday, October 1, 2018

u16 ஆசிய கால்பந்து : காலிறுதியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா

16 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் காலிறுதியில் கொரிய அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. 

16 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியா, கொரிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 

2வது பாதியில் 67வது நிமிடத்தில் கொரிய வீரர் ஜியாங் சங் பின்  (Jeong Sang Bin) கோல் அடித்ததால், கொரியா முன்னிலை அடைந்தது. இறுதிவரை இந்திய அணியால் கோல் அடிக்க முடியாததால் 0-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி காலிறுதியில் தோல்வியடைந்தது.

 தோற்றாலும் சிறப்பாக ஆடிய இந்திய அணிக்கு பல்வேறு சீனியர் வீரர்களும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Classic Right sidebar AFC U16, Championships, South Korea, India, ஆசிய கால்பந்து, கொரியா, இந்தியா விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NgdQe4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment