Thursday, October 4, 2018

ICICI CEO சந்தா கொச்சார் பதவி விலகல்

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி பதவியை சந்த கோச்சர் (Chanda Kochhar) ராஜினாமா செய்துள்ளார். 

இதுகுறித்து ஐசிஐசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பி சந்த கோச்சர் கடிதம் அனுப்பியதாகவும், அவரது கடிதம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க சந்த கோச்சரை தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், ஐசிஐசிஐ இயக்குனர் வாரியத்திலிருந்தும்  அவர் நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு மாற்றாக வங்கியின் செயல் இயக்குனராக செயல்பட்டு வரும் சந்தீப் பாக்‌ஷி (Bakhshi) புதிய தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்படுவதாகவும், இவரது பதவிக்காலம் 2023 அக்டோபர் 3ஆம் தேதி வரை தொடரும் என்றும் அந்த அறிக்கையில் ஐசிஐசிஐ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி மூலமாக வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு சந்த கோச்சர் மறைமுகமாக உதவி செய்ததாக புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar ஐ.சி.ஐ.சி.ஐ., ICICI, Chanda Kochchaar, சந்தா கொச்சார், Sandeep Bakhshi வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ygRzr5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment