'கூகுள் பிளஸ்' சமூக வலைதள சேவை நிறுத்திக்கொள்ளப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் பிளஸ்ஸில் கடந்த மார்ச் மாதமன்று 'பக்' (Bug) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் யூஸர்களின் தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், யூஸர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி தமது சமூக வலைதள சேவையை நிறித்திக்கொள்வதாக கூகுள் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யூஸர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் யூஸர்களின் தகவல்கள் திருடப்பட்டு தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது குறித்து இதுவரை எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபேஸ்புக் யூஸர்களின் தகவல்கள் 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற நிறுவனத்தின் மூலம் திருடப்பட்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar googleplus, dataleak, Google, secret, bug, data, googleusers, கூகுள், யூஸர், கூகுள் பிளஸ் தொழில்நுட்பம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pK8A9l
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment