Wednesday, October 3, 2018

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக-விற்கு அனுமதி...!

தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   

தமிழக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றத்தில்  திமுக அனுமதி கோரியிருந்தது. இம்மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதி அளித்துள்ளது.  

அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுக 127 இடங்களில்  அனுமதி கோரியிருந்தது. ஆனால் 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், 20 இடங்களில் மாற்று இடத்தை பரிந்துரைக்கவும் தமிழக அரசு மற்றும் திமுகவிற்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Classic Right sidebar திமுக, தமிழக அரசு, மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றம், DMK, M.K.Stalin தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O1BAbh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment