Wednesday, October 10, 2018

விளையாட்டுத்துறைக்குள் காதல் .... தினேஷ் கார்த்திக் - தீபிகா லவ் ஸ்டோரி தெரியுமா ? 

அண்மையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா -காஷ்யாப் காதல் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் விளையாட்டுத்துறைக்குள் காதல் திருமணம் செய்தவர்கள் சிலர் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

லவ்-க்கு அப்புறம் லைஃப் இல்லேனா, 25 வயசுக்கு அப்புறம் யாருமே வாழ முடியாதுனு சந்தானம் வசனத்த நாம மறந்திருக்க மாட்டோம். அப்படி இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை வண்ணத்தால் அலங்கரித்தார் தீபிகா. தனது திருமண வாழ்க்கை முடிந்து போன சோகத்தில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், உடற்பயிற்சி எடுத்து வந்த பயிற்சியாளரிடம் தான் தீபிகாவும் பயிற்சி எடுத்தார். அங்குதான் இருவரும் அறிமுகமான இடம். கிரிக்கெட் என்றாலே அலர்ஜி என்றிருந்த தீபிகாவுக்கு பின்னாளில் தினேஷ் உடனான நட்பு வலுவானது. தீபிகாவின் போட்டியை தினேஷ் கார்த்திக்-ம், அவரது ஐபிஎல் போட்டிகளை தீபிகா பார்ப்பதும் வாடிக்கையானது. 2013, சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்ற பரபரப்பிற்கிடையே லண்டனில் தினேஷ் கார்த்திக் தனது காதலை தீபிகாவிடம் வெளிப்படுத்த, அவரும் சம்மதம் தெரிவித்தார். இருவீட்டர் குடும்பத்தினர் சம்மதத்துடன் நவம்பர் 25, 2013ல் நிச்சயதார்த்தம் நடந்தது. 2014ல் இவர்களது திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இருவருக்கும் அடுத்தடுத்து போட்டிகள் இருந்ததால், ஒராண்டுக்கு திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. 2015 ஆகஸ்ட் 18ல் கிறிஸ்துவ முறைப்படியும், ஆகஸ்ட் 20ல் இந்து முறைப்படியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்தியா-பாகிஸ்தான் என்றாலே,அரசியலிலும் சரி, விளையாட்டிலும் சரி போர் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்த திருமணம் என்றால் அது சானியா மிர்சா திருமணம் தான். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சோயிப் மாலிக்-சானியா மிர்சா இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். எதேர்ச்சையாக அமைந்த இந்த சந்திப்பு நாளடைவில் நெருக்கமாக பழகும்படி அமைந்தது. அவ்வப்போது, சானியாவின் போட்டிகளை சோயிப் நேரில் வந்து பார்த்து உற்சாகப்படுத்தினார். பின்னர் இது காதலாக மாற, ஏப்ரல் 12, 2010-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு நாட்டுக்கும் இடையே சண்டை என்ற சூழலிலும் இருவரும் தங்களது காதலை திருமணத்தில் முடித்து, துபாயில் குடியேறினர். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகளாக விளையாடி வந்த சானியா, தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இனி, டென்னிஸ் போட்டிக்கு ஓய்வு தான் என்றும், தன் குழந்தைக்கு முழு நேர தாயாகவுள்ளதாகவும் சானியா தாய்மை பொங்க தெரிவித்துள்ளார். 

ஒரே துறையை சேர்ந்த இருவர் நேசிப்பது என்பது வாடிக்கை. அதிலும், ஒரே விளையாட்டை சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் இணைவது இயற்கையான புரிதலாக இருக்கும். அப்படிதான் செஸ் விளையாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்-அருணா தம்பதியும் விளையாட்டு மூலம் வாழ்க்கையை வென்றுள்ளனர். 1996-ல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 2011-ல் ஆண் குழந்தை பிறந்தது.  

 விஸ்வநாதன் ஆனந்த்-அருணாவை போன்றே பேட்மிண்டன் உடன் தன் வாழ்க்கையை இணைத்தார் கோபிசந்த். 5முறை தேசிய சாம்பியனான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவிவி லட்சுமி, கோபிசந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கடந்த ஜூன்5, 2002-ல் நடைபெற்றது. காயத்ரி, விஷ்ணு என்ற இவர்களது இரு குழந்தைகளும் பேட்மிண்டன் துறையையே தேர்வு செய்துள்ளனர். கோபிசந்த் பிவி சிந்துவின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பயிற்சியாளரை தவறாத மாணவி என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால். கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிச்சந்திடம், சாய்னா நேவால் மற்றும் காஷ்யப் இருவரும் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து, மவுனம் சாதித்து வந்த சாய்னா, தற்போது காஷ்யாப் உடன் திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்துள்ளார்.  

Classic Right sidebar காதல், தினேஷ்கார்த்திக், தீபிகா, லவ்ஸ்டோரி, பேட்மிண்டன், சாய்னா, காஷ்யாப், காதல்திருமணம், love, DineshKarthik, dinesh, Karthik, Sports, Badminton விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yqR0LJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment