தாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட கால்பந்து சிறுவர்கள் அர்ஜெண்டின அதிபர் மயூரிகோ மேக்ரி (Mauricio Macri)-யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தின் வைல்டு போர்ஸ் அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் என 13 பேர் குகைக்குள் சிக்கி 2வார கால நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். இதற்கு பின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அழைப்பின் அடிப்படையில் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்த 12 சிறுவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதனையடுத்து, 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் அர்ஜெண்டின அதிபர் மாளிகையான Casa Rosada-க்கு வந்தனர். இவர்களுடன் அதிபர் மயூரிகோ மேக்ரி (Mauricio Macri) மற்றும் துணை அதிபர் கேப்ரியலா மிசெட்டி (Gabriela Michetti) இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடி வாழ்த்தினர்.
Classic Right sidebar தாய்லாந்து, கால்பந்து சிறுவர்கள், அர்ஜெண்டின அதிபர், மயூரிகோ மேக்ரி உலகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C54YX0
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment