Tuesday, October 2, 2018

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆப்கன் வீரர் ரஷித்கான்...!

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் ஆஃப்கன் ஆல் ரவுண்டர் ரஷித் கான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளையும் ஆட்டம் காண வைத்தது கத்துக்குட்டி அணி என்றழைக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான். உலக கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தானின் இந்த அசுர வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட நாயகன் தான் ரஷித் கான்.

1998ல் ஆஃப்கானிஸ்தானின் நங்கர்ஹர் நகரில் பிறந்த ரஷித் கான் ஆஃப்கான் உள்நாட்டுப்போரால், பாகிஸ்தானுக்கு அகதியாக குடும்பத்துடன் குடியேறினார். பின், மீண்டும் சொந்த நாடான ஆஃப்கானிஸ்தானுக்கு வந்த ரஷித் கான், தனது சகோதரர்களுடன் தெருவில் டென்னிஸ் பந்தை கொண்டு கிரிக்கெட் ஆடி தனது திறமையை வளர்த்துக்கொண்டார். 

2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அரங்கில்  காலடி பதித்த ரஷித் கான், தனது சுழல் மாயாஜாலம் மூலம் தனி முத்திரை பதித்தார். 19 வயதிலேயே தேசிய அணிக்கு கேப்டனாகி, மிகக்குறைந்த வயதில் கேப்டன் மற்றும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக்குறைந்த வயதில் விரைவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற மகத்தான சாதனையையும் படைத்தார். 

டி20 கிரிக்கெட் தளத்திலும் ரஷித்தின் சுழல்மாயம் விக்கெட்டுகளை எடுக்க தவறியதில்லை.  அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் போட்டியில் 2 ஓவர் வீசி 3 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் எடுத்தது இன்றளவும் யாரும் தகர்க்க முடியாத சாதனையாக உள்ளது. மேலும், டி20 அரங்கில் வேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்தவரும் இவர்தான். 

தேசிய அணிக்கு பெயர் வாங்கி கொடுத்த ரஷித் கானை 2017 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடருக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் ஆஃப்கன் வீரர் ரஷித் கான் தான். தனது முத்திரையை ஐபிஎல் தொடரிலும் அவர் பதிக்க தவறியதில்லை. 

பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ரஷித் அசத்தி வருகிறார். 6வது, 7வது வீரராக களமிறங்கும் அவர், அவ்வப்போது தனது பேட்டையும் சுழற்றி கணிசமான ரன்களைச் சேர்ப்பது கூடுதல் சிறப்பு.

2018 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கன் அணி பட்டம் வெல்லாவிட்டாலும், இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகளின் பேட்ஸ்மேன்களை பதம் பார்த்ததற்கு ஆஃப்கன் நாயகன் ரஷித் கான் மிக முக்கிய காரணம். தற்போது, நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக வலம் வரும் ரஷித் கான், உலகளவில் பேசப்படும் ஜாம்பவானாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Classic Right sidebar ரஷித்கான், ஆப்கானிஸ்தான், கிரிக்கெட், Rashidkhan, Afganisthan, Cricket விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qnu9b3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment