Tuesday, October 2, 2018

டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்... மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

டீசல் விலை உயர்வை கண்டித்தும்,  இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக மீனவர்களை விரட்டியடிப்பதும், தாக்குவதும் இலங்கை கடற்படையினரின் அன்றாட வாடிக்கையாக உள்ளது. மேலும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடிப்பதும் இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையாக உள்ளது. 

இந்நிலையில், மீனவர்களை தாக்குவதை கண்டித்தும், இலங்கை வசம் உள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,  ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 8ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Classic Right sidebar பெட்ரோல், டீசல், மீனவர்கள், போராட்டம், Petrol Price, Diesel Price, Fisher Men, Protest, strike தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rie3km
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment