Monday, October 1, 2018

சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனியின் கால்பந்து புகைப்படம்

ஆசிய கோப்பையை கைப்பற்றிய பின் இந்திய வீரர் தோனி, ஆதித்யா ராய், நிக் ஜோனாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கால்பந்து விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அண்மையில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் தோனி அதிகளவில் ரன் குவித்து சோபிக்காவிட்டாலும், அணிக்கு முக்கிய நபராக செயல்பட்டார். தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. 2014-ம் ஆண்டு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தனது ஓய்வு நேரத்தை கால்பந்து விளையாடி கழித்தார். 

மும்பையில், நடைபெற்ற தொண்டு நிறுவனத்திற்கான கால்பந்து போட்டியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஆதித்யா ராய் கபூர், குனல் கேமு, இஷான் காட்டெர், டினோ மொரியா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் உள்ளிட்டோருடன் தோனி கால்பந்து விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Classic Right sidebar விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zJFywB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment