Monday, October 1, 2018

மகாத்மாவின் ரத்தம் படிந்த உடையை வீரமாக தாங்கி நிற்கும் மதுரை காந்தி அருங்காட்சியகம்

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உடமைகள், பொருட்கள் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அது குறித்த செய்தியை தற்போது பார்க்கலாம்.    

1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15ம் தேதி அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவில்லம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தினை விளக்கும் விதமான 265 புகைப்படங்கள் நம்மை அருங்காட்சியகத்தின் முன் இருந்து வரவேற்கிறன.

அடுத்ததாக மகாத்மாவின் வாழ்க்கையை விளக்கி கூறும் விதமாக பல்வேறு குறிப்புகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. மகாத்மாவின் உரையில் பெற்ற அர்த்தம் பொதிந்த வாக்கியங்களும், மேலும் சில நிழற்பட நகல்களும், மகாத்மா அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துப்பிரதிகளும் இங்குள்ளன.

மேலும், காந்தியின் குழந்தை பருவ புகைப்பட தொகுப்புகளும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. 

காந்தி அவர்கள் உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் அருங்காட்சியகத்தை இன்னும் அழகுபடுத்துகின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் படிந்த மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடையை அருங்காட்சியகத்திற்கு வரும் மக்கள் ஒருபோதும் பார்க்க தவறுவதில்லை. மகாத்மா அணிந்திருந்த இந்த உடை அங்கிருப்பது மதுரைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கே கிடைத்த மகா கவுரமாக அமைந்துள்ளது.

Classic Right sidebar Mahatma Gandhi, Gandhi Museum, Gandhi Assasination, madurai, Gandhi Jayanthi, மதுரை, மகாத்மா காந்தி, காந்தி அருங்காட்சியகம், காந்தி ஜெயந்தி தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DM03Nc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment