Tuesday, October 2, 2018

மின்தேவையை  எரிபொருள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடிவு - பிரதமர் மோடி

இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் 40 சதவீதம் மின்தேவையை  எரிபொருள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த நடவடிக்கை தேவை என்றும் அதற்கான ஆற்றலை உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டோம் என்றும் கூறினார். 

மின் உற்பத்தியுடன் மின் சேமிப்பும் முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 40 சதவீதம் மின்தேவையை எரிபொருள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இயற்கை வளங்கள் பாதிக்காமல் போக்குவரத்து அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Classic Right sidebar நரேந்திர மோடி, மின் உற்பத்தி, electricity, Narendra modi இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qsnk8k
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment