Wednesday, October 3, 2018

சபரிமலை வழக்கு: பெண்களுக்கான தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெண்கள் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் கேரளாவில் பேரணியில் ஈடுபட்டனர். 

சபரிமலை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால் பெண் பக்தர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை எனவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவிதாங்கூர் தேவஸம் போர்டும் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லம், ஆழப்புழா, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்கள் போராட்டங்கள் நடத்தினர். பந்தளம் பகுதியில்  பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பிரம்மாண்ட பேரணி நடத்தி தீர்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மத நம்பிக்கைகளை பாதுகாக்க மத்திய- மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Classic Right sidebar சபரிமலை, SabariMala, Sabarimalai Verdict, Supreme Court, Kerala மாநிலம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OzRKrX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment