Wednesday, October 10, 2018

புகாரளிக்க வந்த மனைவியை கரெக்ட் செய்த எஸ்.ஐ... தட்டிக்கேட்ட கணவனுக்கு தர்மஅடி

கணவன் அடிப்பதாக புகாரளித்த மனைவியை எஸ்.ஐ.யே அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டியில் வெள்ளிப்பட்டறை கூலி தொழிலாளி மலைவாசன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மனைவி புகாரளித்துள்ளார். புகார் தொடர்பாக சென்றுவந்தபோது, சிறப்புக் காவல் ஆய்வாளருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, தொடர்பு நீடித்துள்ளது. இதனிடையே,  எதேச்சையாக வீட்டுக்கு வந்த கணவன், அங்கு எஸ்.ஐ. இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 
             
ஏன் இங்கு வந்தீர் என்று கேட்ட கணவனை, எஸ்.ஐ. அடித்து உதைத்து அங்கேயே சிறை வைத்துள்ளார். ஜன்னல் வழியாக சத்தம் போட்டதைக் கேட்ட, அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அப்போது,  அங்கிருந்த எஸ்.ஐ.யை மடக்கி விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவர் அங்கு அடிக்கடி அந்த வீட்டுக்கு மதுபாட்டில்களுடன் வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டினர்

காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவும், தன்னை தாக்கியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தால், யார்தான் பாதுகாப்பளிப்பது....

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ycr2fE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment