Monday, October 8, 2018

திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கிய மக்கள்

பீகார் மாநிலத்தில் திருடியதாக கூறி சிறுவன் ஒருவனை மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள பிடுபூர் என்ற  கிராமத்தில் 12 வயது சிறுவன் ஏதோ பொருளை திருடிவிட்டதாக கூறி அவனை சிலர் மரத்தில் கட்டி வைத்தனர். அப்போது சிறுவன் என்றும் பார்க்காமல் சிலர் அந்த சிறுவனின் முகத்தில் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தக்காட்சியை கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதால் காவல்துறையினர் அங்கு சென்று சிறுவனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Classic Right sidebar பீகார், சிறுவன், தாக்குதல், bihar அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C335df
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment