காட்டு விலங்குகளால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இயற்கை சீற்றங்களால் சேதம் அடையும் பயிர்களுக்கு ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ஒன்றிரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
சில தோட்டக்கலை பயிர்களையும் சோதனை அடிப்படையில் இத்திட்டவரம்புக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Classic Right sidebar காட்டு விலங்கு, பயிர், இழப்பீடு, மத்திய அரசு, central government, Crops, Animals இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A0pAhM
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment