Wednesday, October 3, 2018

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்களின் உரிமம் ரத்து

தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு, தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இதனை எதிர்த்து 75 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தமிழகத்தில் 77 சதவீத நிலத்தடி நீர் ஏற்கனவே உறிஞ்சப்பட்டு விட்டதை சுட்டிக்காட்டினார். 

வருங்கால சமுதாயத்துக்கு தேவையான நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, அரசின் அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டார். மேலும், உறிஞ்சப்படும் நிலத்தடி நீரை அளவீடு செய்ய மீட்டர் பொருத்தாத நிறுவனங்களுக்கு தடை இல்லா சான்று வழங்க கூடாது என்றும், 

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சும்   நிறுவனங்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். 

அது மட்டுமல்லாது, வரையறுக்கபட்ட அளவை தாண்டி நிலத்தடி நீர் உறிஞ்சபடுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு, மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QtUhRU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment